புதுச்சேரி

தேசிய கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி நிறுவனர் லூர்து சாமி பரிசு வழங்கி காட்சி.

அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-01-11 13:39 IST   |   Update On 2023-01-11 13:39:00 IST
  • இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இணைந்து கலா உத்சவ் போட்டிகளை நடத்துகிறது.
  • பிளஸ்-2 மாணவி பிரியத ர்ஷினி மாணவிகள் பிரிவில் வேற்றுமையில் ஒற்றுைம என்பதை விளக்கும் வகையில் பொய்க்கால் குதிரையாட்டம், காவடி, கரகம், மான் கொம்பு, தெம்மாங்கு ஆகிய நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

புதுச்சேரி:

இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இணைந்து கலா உத்சவ் போட்டிகளை நடத்துகிறது.

இந்தாண்டு நடந்த போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 733மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹஷ்வின் குமார், மாணவர்கள் பிரவில் பாரம்பரிய கிராம நடனத்தில் விவசாயம் தான நாட்டின் முதுகெலும்பு, நாட்டின் உயிர் மூச்சு என்பதை விளக்கும் வகையில் கனியன் கூத்து, காவடியாட்டம், கரகம், சிலம்பம் ஆகிய நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

பிளஸ்-2 மாணவி பிரியத ர்ஷினி மாணவிகள் பிரிவில் வேற்றுமையில் ஒற்றுைம என்பதை விளக்கும் வகையில் பொய்க்கால் குதிரையாட்டம், காவடி, கரகம், மான் கொம்பு, தெம்மாங்கு ஆகிய நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

தேசிய அளவிலான நடன போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவன் ஹஷ்வின் குமார் தங்க பதக்கத்தையும் மாணவி பிரியதர்ஷினி வெள்ளி பதக்கத்தையும் வென்று அரசுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த மாணவர்களை பள்ளி நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்துசாமி, பாராட்டி மாணவன் ஹஷ்வின் குமாருக்கு 4 கிராம் தங்க காசும், மாணவி பிரியதர்ஷினிக்கு 2 கிராம் தங்க காசும் பரிசாக வழங்கினார்.

இந்த பள்ளி தேசிய கலா உத்சவ் போட்டிகளில் தொடர்ந்து 4-வது முறையாக வென்று பதக்கம் பெறுவது குறிப்பிடத் தக்கது.

Tags:    

Similar News