புதுச்சேரி

சாதனை படத்த மாணவ-மாணவிகளை ஆல்பா கல்வி நிறுவனங்களில் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்து பாராட்டிய காட்சி.

ஆல்பா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-09-22 14:35 IST   |   Update On 2022-09-22 14:35:00 IST
  • புதுவை உருளை யன்பேட்டை மங்க லட்சுமி நகரில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
  • சென்னை மற்றும் ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுவை உருளை யன்பேட்டை மங்க லட்சுமி நகரில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் இந்த ஆண்டு( 2022) 72 மாணவ-மாணவிகளுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 68 மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சங்கீதா, பிரியங்கா, கிஷோர், தீபா ஆகிய 4 மாணவர்கள் பள்ளி அளவில் முதல் 4 இடங்களை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவ-மாணவிகளின் கடின உழைப்பைப் பாராட்டி ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தன தியாகு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

ஆல்பா பள்ளியில் நீட் சிறப்பு வகுப்பிற்காக அந்தந்த துறை நிபுணர்கள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆல்பா பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாட பிரிவின் அடிப்படையில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News