புதுச்சேரி

உண்ணாவிரத போராட்டத்தில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம்

Published On 2022-12-15 15:18 IST   |   Update On 2022-12-15 15:18:00 IST
  • உழவர்கரையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
  • இந்த நிலையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

உழவர்கரையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உழவர்கரையில் புதிய மதுப்பானக்கடை அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஏற்கனவே இங்கு மதுபானக்கடைகள் உள்ள நிலையில் மேலும் இங்கு மதுப்பானகடை திறந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் புதிய மதுபானகடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான சிவசங்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், காங்கிரஸ் பொது செயலாளர் செல்வம் என்ற செல்வராஜ், இந்திய கம்யூனிஸ் மாநில குழு உறுப்பினர் தேவசகாயம், விடுதலை சிறுத்தை கட்சி தேவேந்தரன், தீய்தமிழன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், சமூக இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News