புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த அகில இந்திய கராத்தே, கிக் பாக்சிங் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஜி சந்திரன் பரிசு வழங்கிய காட்சி.
அகில இந்திய கராத்தே-கிக் பாக்சிங் போட்டி
- புதுவை உப்பளத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவில் கராத்தே தேக்வாண்டோ கிக் பாக்சிங் போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி வரை நடைபெற்றது.
- போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவில் கராத்தே தேக்வாண்டோ கிக் பாக்சிங் போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி வரை நடைபெற்றது.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஓபன் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். போலீஸ் ஐ.ஜி சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புதுவை சேர்ந்த சங்கவி வென்றார்.
அவருக்கு பரிசுக் கோப்பையும், 12 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. 2-வது இடம் வென்ற புதுவையை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு தங்க நாணயமும், கோப்பையும் வழங்கப்பட்டது. 3-வது பரிசு வென்ற யாமினிக்கு கோப்பையும், தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
விழாவில் புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்க சேர்மன் என்.ஆர்.ராஜா, தேசிய நடுவர்கள் மோகன், அமித்ராஜ், சந்துரு, பிரவீன்குமார், அய்யனார், விநாயகம், ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.