சட்டப்பேரவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கட்டிடத்தை திறந்து வைத்த காட்சி.
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடம்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
- அ.தி.மு.க .குமுதன், என்.ஆர் காங்கிரஸ் சுந்தர்ராசு, புருஷோத்தமன் மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அரசு கூட்டுறவுத்துறை புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
சட்டப்பேரவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கனார். முதல்-அமைச்சர் என்.ரங்கசாமி கட்டிடத்தை திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா கூட்டுறவு கடன் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி இயக்கு னர்கள் பழனி என்கிற தனரா சக்திவேல் என்ற சுப்பிரமணியன் மேலாளர் குமாரவேல், பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் பா.ஜனதா விவசாய அணி சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகர், அ.தி.மு.க .குமுதன், என்.ஆர் காங்கிரஸ் சுந்தர்ராசு, புருஷோத்தமன் மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.