கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ரியல் புட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
ரியல் புட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
- மணக்குள விநாயகர் தொழில் நுட்ப கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்ப துறை மாணவர்கள் தொழிற்சாலை பார்வையிடல், உணவு தரம் கண்டறிதல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கல்லூரியோடு இணைந்து வழங்கிட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இதில், உணவு தொழில் நுட்ப துறை தலைவர் திருச்செல்வம், வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி, ரியல் புட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மணக்குள விநாயகர் தொழில் நுட்ப கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்ப துறை மாணவர்கள் தொழிற்சாலை பார்வையிடல், உணவு தரம் கண்டறிதல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கல்லூரியோடு இணைந்து வழங்கிட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
ஒப்பந்தத்தில் கல்லூரி சார்பில் முதல்வர் மலர்க்கண் மற்றும் ரியல் புட்ஸ் நிறுவன உரிமையாளர் அசோக் ரெட்டி ஆகியோர் கையெழு த்திட்டு, புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம் செய்து கொண்டனர். பின், இயற்கை உணவு தொழில்நுட்பம் பற்றி அசோக் ரெட்டி சிறப்புரையாற்றினார்.
இதில், உணவு தொழில் நுட்ப துறை தலைவர் திருச்செல்வம், வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் சாந்தலட்சுமி, பாக்யாநிஷா, ஷைலஜா ஆகியோர் செய்திருந்தனர்.