புதுச்சேரி

சாதனை படைத்த மாணவ-மாணவிகள்

மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர்கள் சாதனை

Published On 2022-09-20 09:44 IST   |   Update On 2022-09-20 09:44:00 IST
  • புதுவை அகாடமி ஆப் பிளாக் செயின் கவுன்சில், துபாய் நிறுவனம் சார்பில், பிளாக் செயின் ஸ்கில் சம்மிட் போட்டி நடைபெற்றது.
  • இப்போட்டியில், பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி திறன்களை தொழில் மயமாக்குவதற்கான பல்வேறு ஆய்வுத்திறன் அறிக்கைகளை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை அகாடமி ஆப் பிளாக் செயின் கவுன்சில், துபாய் நிறுவனம் சார்பில், பிளாக் செயின் ஸ்கில் சம்மிட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி திறன்களை தொழில் மயமாக்குவதற்கான பல்வேறு ஆய்வுத்திறன் அறிக்கைகளை வழங்கினார்.

இதில் 1200-க்கும் மேற்பட்ட குழு அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டது. இறுதிப்போட்டி கடந்த 14-ந் தேதி சென்னையில் நடைபெற்றது. மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் ஸ்ரீஅரோபிந்ராம், விக்னேஷ், வைத்திலிங்கம், பாலாஜி, லோகேஷ்வர்மன் ஆகியோர் சமர்ப்பித்த மென்பொருள் ஆய்வறிக்கை முதலிடம் பெற்றது. பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் மற்றும் துபாயில் இண்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பரிசு வென்ற மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர்.

மேலும், கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ராஜு, துறையின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News