புதுச்சேரி

கோப்பு படம்.

6-வது சம்பள அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவேண்டும்

Published On 2022-10-15 09:59 IST   |   Update On 2022-10-15 09:59:00 IST
  • புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருட பணி முடித்த போலீசாருக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
  • அந்த புகாரின் அடிப்படையின்படி காவலர்களுக்கு உடனே பதவி உயர்வு அளிக்க ஐ.ஜி.க்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை பதவி உயர்வு வழங்காமல் உள்ளது.

புதுச்சேரி:

புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் புதுவை போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருட பணி முடித்த போலீசாருக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். மேலும் 20 வருடம் பணி முடித்தவர்களை துணை உதவி ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். மேலும் 30 வருட பணி முடித்தவர்களை உதவி ஆய்வாளராக பணி உயர்வு வழங்க வேண்டும் என்று 6-வது சம்பள கமிஷன் உத்தரவு பிறப்பித்து 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியும் 6-வது சம்பள கமிஷன் உத்தரவை அமல்படுத்தாமல் இது வரை உள்ளது வேதனை அளிக்கிறது. கிடைக்க வேண்டிய பதவி உயர்வு குறித்த நேரத்தில் வழங்கப்படாமல் உள்ளது.

மேலும் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வில்லை என்று முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் காவலர் பொதுநல இயக்கம் புகார் அளித்தது.

அந்த புகாரின் அடிப்படையின்படி காவலர்களுக்கு உடனே பதவி உயர்வு அளிக்க ஐ.ஜி.க்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் இதுவரை பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் போலீசாருக்கு பதவி உயர்வு அளித்து போலீசாரின் எதிர்கால வாழ்வில் வசந்தம் வீச வேண்டும்.

மேலும் காவல்துறையில் போலீசார் சோர்வு இல்லாமல் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News