புதுச்சேரி

கோப்பு படம்.

பெண்ணை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

Published On 2023-07-31 14:01 IST   |   Update On 2023-07-31 14:01:00 IST
  • இளம்பெண் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்தார்
  • போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை தமிழக பகுதியான புதுக்கடை கீழ்பாதி பகுதியை சேர்ந்த பாபு என்ற வாலிபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் பாபு மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பாபுவின் தூண்டுதலின் பேரில் அவரது தாயார் ராஜேஸ்வரி சகோதரி சுந்தரி, சித்தி மகள் ெஜயா, சுந்தரியின் கணவர் விஜயராஜ் ஆகிய 4 பேர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரதுபெற்றோர் இல்லாத நிலையில் அந்த பெண்ணை வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று திட்டினர்.

மேலும் வழக்கை வாபஸ் வாங்காவிட்டாலும் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வரக்கூடாது என மிட்டி விட்டு சென்றனர்.

இதுகுறித்து அந்த பெண்தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவின் தாய் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News