வழிபாடு
அவினாசி கோவிலில் அம்மன் தேரோட்டம்

அவினாசி கோவிலில் அம்மன் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2022-05-14 13:28 IST   |   Update On 2022-05-14 13:28:00 IST
இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீகருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணா ம்பிகை உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாத தேரோட்ட திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

திருவிழாவின் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியாக பெரியதேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. உற்சவ மூர்த்தியான சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரி தேரில் எழுந்தருளிய நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் சிவசிவ கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

பின்னர் அவினாசி மேற்கு ரதவீதி குலாலர் மண்டபம் அருகே தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீகருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Similar News