வழிபாடு
அரங்கநாதர் ஸ்ரீதேவி,தேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்ததையும், திரளான பக்தர்கள்பங்கேற்றதையும் காணலாம்

தேர்த்திருவிழாவை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2022-02-16 10:16 IST   |   Update On 2022-02-16 10:16:00 IST
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான காரமடை அரங்க நாதர் கோவில் உள்ளது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(17-ந் தேதி) நடக்கிறது.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான காரமடை அரங்க நாதர் கோவில் உள்ளது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(17-ந் தேதி) நடக்கிறது.

இந்த கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரி சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.நேற்று பெட்டதம்மன் மலையிலிருந்து பெட்டதம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதனையொட்டி கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் முன் மண்டபத்தில் அரங் கநாதசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி யுடன் எழுந்தருளினார்.

அங்கு வேதவிற்பன்னர் கள் வேத மந்திரம் முழங்க அரங்கநாத பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோ‌ஷம் எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். திருக்கல்யாயண நிகழ்ச்சியில் காரமடை, மேட்டுப் பாளையம், சிறுமுகை, கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரங்கநாதரை தரிசனம் செய்து சென்றனர்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(17-ந் தேதி) நடக்கிறது. இதனையொட்டி காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக அரங்கநாத பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். தேரோட்டம் மாலை 4 மணிக்கு நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 18-ந் தேதி பரிவேட்டை, 19-ந் தேதி தெப்போற்சவம், 20-ந் தேதி சந்தான சேவையும் நடைபெற உள்ளது.

Similar News