செய்திகள்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா தொடங்கியது

Published On 2018-07-18 14:48 IST   |   Update On 2018-07-18 14:48:00 IST
வனபத்ரகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கோவில் தலைமைப்பூசாரி பரமேஸ் வரன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக ஆற்றின் கரையோரப்பகுதயில் உள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு சிறப்பு பூஜைக்குப் பின்னர் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க தலைமைப்பூசாரி பரமேஸ் வரன்அம்மன் ஆபரண அணிக் கூடையுடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா. உதவி ஆணை யரும் செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் பூசாரி பரமேஸ்வரனுக்கு காப்புகட்டப்பட்டது.அதனைத்தொடர்ந்து நெல்லித்துறை கிராம மக்கள் சார்பாக பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News