செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று (புதன் கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை ( 22-ந்தேதி) வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, 23-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. 24-ந் தேதி வெள்ளி பூதவாகனத்திலும், 25-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்), 26-ந் தேதி வெள்ளியானை வாகனத்திலும், 27-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 28-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடக்கிறது.
முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது.
30-ந் தேதி (வெள்ளிக் கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நட பெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசன விழா நடைபெறுகிறது.
ஜூலை 1-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.