செய்திகள்
ஆப்பக்கூடல் அருகே கோவில் விழாவில் பக்தர்கள் மீது சுடுகஞ்சி வீசும் நிகழ்ச்சி
ஆப்பக்கூடல் அருகே கோவில் விழாவில் பக்தர்கள் மீது ‘சுடுகஞ்சி’ வீசும் நிகழ்ச்சி விநோத நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலை அடுத்த பொதியாமூப்பனூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆவணி மாதம் தேர்த் திருவிழா விமரிசையாக நடக்கும்.
இந்தாண்டு, கடந்,த 9ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கி, கொடி ஏற்றம் நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது சுடு கஞ்சி தெளிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரிய மண்பானையில் பொங்கல் கஞ்சி வைத்து கொதியானவுடன், கோவில் பூசாரிகள், தென்னை மரக் குருத்தின் மூலம், கஞ்சியை நனைத்து பக்தர்கள் மீது வீசி தெளித்தனர்.
இவ்வாறு கஞ்சியை தெளிப்பதன் மூலம், பக்தர்கள் நீண்ட ஆயுளோடும், செல்வம் பெருகும் என்பதும் நம்பிக்கை. மேலும், குழந்தைபேறு இல்லாத பெண்கள், சுடு கஞ்சி சோற்றை பூசாரியிடம் இருந்து வாங்கி சாப்பிடும் போது, குழந்தை பாக்கியம் உண்டு என்பதும் ஐதீகம்.
இதைத் தொடர்ந்து, பன்றி, ஆடு, கோழி ஆகியவற்றை சுவாமிக்கு பலி கொடுத்து, வயிற்றைக் கிழிந்து, வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொடுக்கும் பரண் ஏறுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இப்படி கொடுக்கப்படும் பழத்தை சாப்பிடும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பதால், 100க்கும் மேற்பட்டோர் வாங்கி சாப்பிட்டு தரிசித்தனர்.
நாளை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களிலிருந்து ம் ஆயிரக்கணக்கான பக்தர்கள்களும் கலந்து கொள்கிறார்கள்.
தேர்த் திருவிழாவுக்கு, அந்தியூர் அரசு போக்குவரத்து கழகம் மூலம், சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற இத்திருவிழாவில், பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 31ம் தேதி மறு வனபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.