செய்திகள்
சிவகிரி லக்னேஸ்வரர் கோவிலில் பறவைக்காவடி ஊர்வலம்
காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் சிவகிரி லக்னேஸ்வரர் கோவிலில் பறவைக்காவடி ஊர்வலம் நடைபெற்றது.
சிவகிரியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான லக்னேஸ்வரர் காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கடந்த 11–ம் தேதி கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மூலவர் உட்பட அனைத்து விக்ரகங்களுக்கும் பால், தயிர், நெய், தண்ணீர், எலுமிச்சை சாறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடந்தது.
ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. 7–ம் திருநாளில் இரவு விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு உடலில் அலகுகள் குத்தியும், மச்சக்காவடி, பறவைக்காவடி எடுத்தும் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
பறவைக்காவடி செல்லும்பொழுது குழந்தை இல்லாதவர்கள் பறவைக்காவடியில் குழந்தை கொடுத்து குழந்தையை வாங்கினால் குழந்தை பிறப்பதாக ஐதிகம் உண்டு. இவ்விழாவில் தர்மகர்த்தா நச்சாட லிங்கம், உதவி தர்மகர்த்தா நடராஜன், கோவில் பூசாரி அய்யாத்துரை, மகேந்திரன், வாசுதேவநல்லூர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் திருஞானம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.