செய்திகள்

15 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் முகமது அமிர்: பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன் முதலிடம்

Published On 2019-06-24 12:21 GMT   |   Update On 2019-06-24 12:21 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் முகமது அமிர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். உலகக்கோப்பைக்கான முதற்கட்ட பாகிஸ்தான் அணியில் அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது விமர்சனம் எழுந்தது.

இதனால் ஐசிசி-யின் காலக்கெடுவுக்கு முன் முகமது அமிர் அணியில் சேர்க்கப்பட்டார். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட இங்கிலாந்தில் முகமது அமிர் சிறப்பாக பந்து வீசி அசத்தி வருகிறார்.

இதுவரை பாகிஸ்தான் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அமிர் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி  3-வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரையில் சாஹல் 4 போட்டிகளில் 8 விக்கெட்டும், பும்ரா 7 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.



ரன் குவிப்பில் வங்காள தேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 6 போட்டியில் 476 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 447 ரன்களுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 424 ரன்களுடன் 3-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 396 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.



கேன் வில்லியம்சன் 373 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், ரோகித் சர்மா 320 ரன்களுடனுன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News