செய்திகள்

முகமது ஷமிக்கு உத்வேகமாக அமைந்த சச்சின் தெண்டுல்கரின் பேச்சு

Published On 2019-06-24 10:44 GMT   |   Update On 2019-06-24 10:44 GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசுவதற்கு சச்சின் தெண்டுல்கரின் பேச்சு உத்வேகமாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இவருக்கு தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்து. இக்கட்டான நிலையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரின் பேச்சுதான் ஷமிக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அதில் எந்த தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்போது, சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.



உங்களுடைய நேரம் வரும். அந்த நேரத்தை மிகவும் விரைவாக பெறுவீர்கள். புவி காயத்தை நான் விரும்பவில்லை. என்றாலும், உங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது என்றேன்.

புவனேஷ்வர் குமாரின் துரதிருஷ்டவசமான காயம், முகமது ஷமியை ஆடும் லெவன் அணியில் விளையாட அனுமதித்துள்ளது. ஷமி முதல் பந்தில் இருந்தே தொடர்ச்சியாக மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசினார்’’ என்றார்.
Tags:    

Similar News