செய்திகள்

உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் ஷமி

Published On 2019-06-23 09:13 GMT   |   Update On 2019-06-23 09:13 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி முகமது ஷமி சாதனைப் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் வேகப்பந்து வீரர் முகமது ஷமி. அவர் 9.5 ஓவர் வீசி 40 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் முகமது ஷமி அடுத்தடுத்து 3 விக்கெட் கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 3-வது பந்தில் முகமது நபி, 4- வது பந்தில் அப்தாப் ஆலம், 5-வது பந்தில் முஜீபுர் ரகுமான் ஆகியோரையும் அவர் ‘அவுட்’ செய்தார்.

இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 2-வது இந்தியர் என்ற சாதனையை முகமது ஷமி பெற்றார். இதற்கு முன்பு 1987-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சேட்டன் சர்மா ‘ஹாட்ரிக்’  நிகழ்த்தி இருந்தார். சர்வதேச அளவில் 9-வது வீரர் ஆவார்.

உலகக்கோப்பையில் 10-வது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் வருமாறு:-

சேட்டன் சர்மா (இந்தியா)- நியூசிலாந்து- 1987
சக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்) ஜிம்பாப்வே 1999
சமிந்தா வாஸ் (இலங்கை) வங்காளதேசம் 2003
பிரெட் லீ (ஆஸ்திரேலியா) தென்ஆப்பிரிக்கா 2003
மலிங்கா    (இலங்கை) தென்ஆப்பிரிக்கா 2007
கேமர் ரோச் (வெஸ்ட் இண்டீஸ்) நெதர்லாந்து 2011
மலிங்கா    (இலங்கை) கென்யா 2011
ஸ்டீவ்பின் (இங்கிலாந்து) ஆஸ்திரேலியா 2015
டுமினி (தென்ஆப்பிரிக்கா) இலங்கை 2015
முகமது ஷமி (இந்தியா) ஆப்கானிஸ்தான் 2019
Tags:    

Similar News