உலகம்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் பாகிஸ்தான் கிராமம்

Published On 2024-12-27 20:57 IST   |   Update On 2024-12-27 20:57:00 IST
  • இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காலமானார்.
  • பாகிஸ்தானில் அவர் 4-ம் வகுப்புவரை படித்த பள்ளி உள்ள கிராமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் நேற்று மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. 92 வயதாக இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

உலகக் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு கிராமம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த கிராமமே அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் மறைந்ததாக உணர்கிறோம் என அல்டாஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார். இவர் அந்த கிராம மக்களின் தலைவர் ஆவார்.

மன்மோகன் சிங் 4-ம் வகுப்பு வரை படித்த கா கிராமம் (Gah village) பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த கிராமம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தென்மேற்கோ 100 கி.மீ. தொலைவில் உள்ளது. மன்மோகன் சிங் பிறக்கும்போது ஜீலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-ம் ஆண்டு சக்வால் மாவட்டமாக பிரிக்கப்படும்போது இதனுடன் சேர்ந்தது.

மன்மோகன் சிங் உடன் படித்த ராஜி முகமது அலியின் மருமகன் ராஜா ஆஷிக் அலி 2008-ம் ஆண்டு டெல்லி சென்று மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தெரிவித்தார்.

கிராமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த வேதனை அடைகிறோம். மன்மோகன் சிங் இறுதிச் சடங்கில் பங்கேற்க விருப்பம் உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆகையால் அஞ்சலி செலுத்துகிறோம்.

Tags:    

Similar News