உலகம்

கடற்கரையில் இருந்து அரிய உயிரினத்தை எடுத்துச் சென்ற குழந்தைகள்- தாய்க்கு ரூ.73 லட்சம் அபராதம்

Published On 2024-05-25 05:18 GMT   |   Update On 2024-05-25 06:15 GMT
  • பிஸ்மோ கடற்கரை, மட்டிகளின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது.
  • மீனவர்களைத் தவிர வேறு யாரும் மட்டிகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த சார்லோட் ரஸ் தனது குழந்தைகளுடன் பிஸ்மோ கடற்கரைக்கு சென்றார். அப்போது குழந்தைகள் சிப்பி போல தோற்றமளிக்கும் இறால் வகையான கடல் மட்டிகளை சேகரித்தனர்.

அவர்கள் 73 கடல் மட்டிகளை சிப்பிகள் என்று நினைத்து வீட்டுக்கு எடுத்து சென்றனர். அப்போது வழியில் சோதனை நடத்திய மீன்வளத்துறையினர், அரிய வகை மட்டிகளை சேகரித்த குற்றத்திற்காக, 88 ஆயிரம் அமெரிக்க டாலர்களை குழந்தைகளின் தாய்க்கு (இந்திய மதிப்பில் ரூ.73 லட்சம்) அபராதமாக விதித்தனர்.


பிஸ்மோ கடற்கரை, மட்டிகளின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இங்கு மீனவர்களைத் தவிர வேறு யாரும் மட்டிகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் என்றாலும், ஒரு நாளைக்கு 10 மட்டிகளுக்கு மேல் சேகரிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சார்லோட் ரஸ் கூறும்போது, சிப்பி என்று நினைத்தே குழந்தைகள் மட்டிகளை சேகரித்தனர். கோர்ட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டதால், அபராதம் 500 டாலராக (சுமார் ரூ.41 ஆயிரம்) குறைக்கப்பட்டது என்றார்.

Tags:    

Similar News