உலகம்
அமெரிக்காவில் சோகம் - ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி
- அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுஎச்-60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர். இது ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என தகவல்கள் கூறுகின்றன.
இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் விபத்து நடந்த இடத்தில் கரும்புகை எழும்பியதைக் காண முடிந்ததாகவும், அங்கு ஆம்புலன்சுகள் விரைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.