உலகம்
அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி
- லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.
- துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்ன காரணம் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒரு பங்களாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
கலிபோர்னியாவில் இந்த மாதத்தில் நடந்த 4-வது துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.