உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது

Published On 2023-02-15 04:07 GMT   |   Update On 2023-02-15 07:08 GMT
  • இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
  • நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது.

துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.

மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப்படுகிறது. அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News