உலகம்

பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கார் வாங்க தடை

Published On 2022-06-11 10:34 GMT   |   Update On 2022-06-11 10:34 GMT
  • நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
  • இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது.

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறும்போது, பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News