உலகம்

காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்: கனடாவில் காந்தி சிலை அவமதிப்பு

Update: 2023-03-25 06:30 GMT
  • இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
  • காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டுள்ளனர்.

பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். 6 அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலை மீது பெயிண்டை ஊற்றியுள்ளனர். சிலையின் அடிப்பாகத்தில் இந்திய அரசு, பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து வாசகங்களை எழுதியுள்ளனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டுள்ளனர்.

Similar News