உலகம்

கோத்தபயவை தொடர்ந்து பசில் ராஜபக்சேவும் இலங்கை திரும்பினார்

Published On 2022-11-21 11:24 IST   |   Update On 2022-11-21 14:36:00 IST
  • பொதுமக்கள் போராட்டம் முடிந்து அமைதி நிலவி வருவதால் கோத்தபய ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சொந்த நாடு திரும்பினார்.
  • ராஜபச்சே குடும்பத்தினர் சொந்த நாடுகளுக்கு வந்து உள்ளதால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

கொழும்பு:

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இதே போல் நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் முடிந்து அமைதி நிலவி வருவதால் கோத்தபய ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சொந்த நாடு திரும்பினார்.

இவரை தொடர்ந்து தற்போது பசில் ராஜபக்சேவும் நேற்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பினார். அவர் தங்கியுள்ள இடத்தில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து ராஜபச்சே குடும்பத்தினர் சொந்த நாடுகளுக்கு வந்து உள்ளதால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

Similar News