உலகம்

ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ வாய்ப்பு இல்லை- நாசா அறிவிப்பு

Published On 2022-09-13 06:41 GMT   |   Update On 2022-09-13 06:41 GMT
  • ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வருகிற 23-ந் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்ய இருந்தது.
  • என்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் ஆபரேசன் நடத்தப்படுகிறது.

நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டு உள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

இதன் முதற்கட்டமாக ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட உள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகே ஒரியன் விண்கலத்தை பறக்க வைக்க நாசா திட்டமிட்டு உள்ளது.

ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த மாதம் 29-ந் தேதி கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 3-ந் தேதி ராக்கெட்டை ஏவும் பணிகள் நடந்துவந்த நிலையில் எரிபொருள் கசிவு காரணமாக விண்ணில் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டதாக நாசா தெரிவித்தது.

இதற்கிடையே ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வருகிற 23-ந் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்ய இருந்தது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராக்கெட் ஏவுதல் 3-வது முறையாக தாமதமாகி உள்ளது. வருகிற 23-ந் தேதி ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு இல்லை என்றும் 27-ந் தேதியை இலக்காக கொண்டுள்ளோம் என்றும் நாசா அறிவித்துள்ளது.

70 நிமிடங்களுக்குள் ராக்கெட் ஏவுதல் நடத் தப்பட வேண்டும் என்று நாசா கட்டுப்பாடு விதித்து உள்ளது.

தற்போது என்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் ஆபரேசன் நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News