உலகம்

அமெரிக்காவின் டெக்சாசில் ரெயில் விபத்தில் 2 பேர் பலி

Update: 2023-03-25 05:24 GMT
  • அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் உள்ள உவால்டே நகரில் ரெயில் விபத்து ஏற்பட்டது.
  • உவால்டேவுக்கு கிழக்கே ரெயிலில் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

அமெரிக்காவின் தெற்கு டெக்சாசில் உள்ள உவால்டே நகரில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உவால்டேவுக்கு கிழக்கே ரெயிலில் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் பயணம் செய்தனர் என்றும் அப்போது ரெயில் விபத்தில் சிக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆவணமற்ற புலம் பெயர்ந்தோர் ரெயிலில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News