உலகம்

ஓட்டலில் அடைத்து வைத்து கொடூரம்: பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க பெண் கற்பழிப்பு

Published On 2022-07-20 06:03 GMT   |   Update On 2022-07-20 06:03 GMT
  • பேஸ்புக் பக்கம் ஒன்றை நடத்தி வரும் அமெரிக்க பெண் சுற்றுலா தலங்களுக்கு சென்று அதனை பதிவிட்டு வந்துள்ளார்.
  • அவர் கடந்த 7 மாதங்களாக பாகிஸ்தானில் தங்கி இருந்தார்.

லாகூர்:

அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார்.

பேஸ்புக் பக்கம் ஒன்றை நடத்தி வரும் அவர் சுற்றுலா தலங்களுக்கு சென்று அதனை பதிவிட்டு வந்துள்ளார். அவர் கடந்த 7 மாதங்களாக பாகிஸ்தானில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதள நண்பரான முஸ்மல் சிப்ரா என்பவரின் அழைப்பை ஏற்று கராச்சியில் இருந்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மலைபிரதேசமான போர்ட் மன்ரோ என்ற இடத்துக்கு அமெரிக்க பெண் சென்றார்.

அங்கு ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவரை இரண்டு மர்மநபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். ஓட்டல் அறையில் அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து அமெரிக்க பெண் போலீசில் புகார் செய்தார். அதில் ஓட்டலில் தங்கியிருந்த போது 2 பேர் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் என்னை அச்சுறுத்துவதற்காக அதை வீடியோவும் எடுத்தனர் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஹம்சா ஷெஹ்பாஸ் கூறும்போது, குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி முன் மாதிரியான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News