உலகம்

ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கை

Published On 2025-07-17 15:43 IST   |   Update On 2025-07-17 15:43:00 IST
  • சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
  • இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து ஸ்விடா மாகாணத்துக்கு கூடுதல் அரசுப்படைகள் அனுப்பப்பட்டன. இதில் ட்ரூஸ் மதத்தினர் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.

தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையை வீசியது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறும்போது, "போருக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம்.

சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது" என்றார்.

Tags:    

Similar News