உலகம்

உலகம் நாளை 6 நிமிடம் இருளில் மூழ்கும்... நாசா சொல்வது என்ன?

Published On 2025-08-01 10:59 IST   |   Update On 2025-08-01 10:59:00 IST
  • 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ உள்ளது.
  • இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும்.

கடந்த சில நாட்களாக நாளை உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு நாசா மறுத்துள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் நகர்ந்து வந்து சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் சூரியனின் வெளிச்சம் சிறிது நேரத்திற்கு பூமி மேல் விழாது. இதுவே சூரிய கிரகணம் ஆகும். 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ உள்ளது. ஆனாலும் அது மிகச் சிறிய சூரியகிரகணம்தான்.

கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 2, 2027-ம் ஆண்டு நிகழ இருக்கும் சூரிய கிரகணம் தான் இந்த நூற்றாண்டில் நிகழ இருக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம்.

இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடி வரை நீடிக்க உள்ளது . ஆனாலும் இது பூமியை முழுவதும் இருளாக ஆக்காது. ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது. இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News