உலகம்

அறுவை சிகிச்சைக்கு பின் போப் பிரான்சிஸ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Published On 2023-06-19 03:09 GMT   |   Update On 2023-06-19 03:09 GMT
  • போப் பிரான்சிஸ் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
  • செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார்.

வாடிகன்சிட்டி :

குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் (வயது 86) ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணம் அடைந்த அவர், கடந்த 16-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வாடிகன் திரும்பினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், நேற்று வரை அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனினும் நேற்று அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார். இதில் கலந்து கொண்ட ஏராளமானோர், போப் ஆண்டவரை கைதட்டி வாழ்த்தினர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபோது தனக்கு உதவிய மற்றும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு போப் ஆண்டவர் நன்றி தெரிவித்தார்.

போப் ஆண்டவர் தனது உரையில் கிரீஸ் நாட்டு கடற்பகுதியில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார். மேலும் உகாண்டாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலையும் கண்டித்தார்.

Tags:    

Similar News