உலகம்
null

அரசு சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்தது நியூயார்க் நிர்வாகம்

Published On 2023-08-17 02:24 GMT   |   Update On 2023-08-17 04:38 GMT
  • டிக்டாக செயலி மூலம் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல்
  • விதிவிலக்குடன் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை இருந்து வருகிறது

சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியின் நிறுவனம் சீனாவை சேர்ந்தது. டிக்டாக் செயலி மூலம் தரவுகளை திருடுவதாகவும், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சீன அரசு மீது பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் டிக்டாக் செயலி நிறுவனம் மற்றும் சீன அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தன.

என்றாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. அமெரிக்கா கடந்த 2022-ல் சில விதிவிலக்குடன் டிக்டாக் செயலியை அரசு சாதனங்களில் பயன்படுத்த தடைவிதித்தது.

இந்த நிலையில் நியூயார்க் மாநில நிர்வாகம் அரசு சாதனங்களில் டிக்டாக் செயலியை முற்றிலும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நியூயார்க் மேயருக்கான செய்தி தொடர்பாளர் ஜோனா ஆலோன் ''டிக்டாக் செயலிலால் நகரின் டெக்னிக்கல் நெட்வொர்க்கிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சைபர் பிரிவு தெரிவித்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

நியூயார்க் மாநலம், மூன்று வருடத்திற்கு முன்னதாக சில விதிவிலக்குடன் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News