உலகம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு - ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Published On 2023-08-01 03:35 IST   |   Update On 2023-08-01 03:35:00 IST
  • பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • இதில் 23 சிறுவர்கள் உள்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

கராச்சி:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது.

இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைபர் பக்துன்வா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

Tags:    

Similar News