உலகம்

கொடிகளை எரித்து போராட்டம்

அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் - ஈரானில் கோஷமிட்ட போராட்டக்காரர்கள்

Published On 2022-07-17 02:11 IST   |   Update On 2022-07-17 02:11:00 IST
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • அதிபர் ஜோ பைடனின் மத்திய கிழக்கு நாடுகளின் பயணத்திற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் ஜோர்டான் சென்றுள்ளார்.

அதிபர் ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான்பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மத்திய கிழக்கு நாடுகளின் பயணத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன போராட்டம் நடந்து வருகிறது.

அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என்ற கோஷங்களுடன் திரண்ட போராட்டக்காரர்கள் இரு நாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமெரிக்கா, இஸ்ரேலின் தேசிய கொடிகளையும் தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News