உலகம்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் பின்தங்கிய இந்தியா.. விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு போகலாம் தெரியுமா?

Published On 2025-10-16 13:38 IST   |   Update On 2025-10-16 13:38:00 IST
  • சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.
  • பாகிஸ்தான் 103வது இடத்திலும், வங்கதேசம் 100வது இடத்திலும், நேபாளம் 101வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் உள்ளன.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க நாடான மவுரிட்டானியாவும் இந்தியாவுடன் 85வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு பயணிக்க முடியும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 62 ஆக இருந்தது. விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூட்டான், மாலத்தீவு,தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். 

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

அதன் பிறகு, தென் கொரியா (190 நாடுகள்) இரண்டாவது இடத்தையும், ஜப்பான் (189 நாடுகள்) மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்தன.   

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 103வது இடத்திலும், வங்கதேசம் 100வது இடத்திலும், நேபாளம் 101வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் பூட்டான் 92வது இடத்திலும் உள்ளன.

ஆப்கானிஸ்தான் உலகின் பலவீனமான பாஸ்போர்ட் உடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் குடிமக்கள் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.   

Tags:    

Similar News