உலகம்

பாகிஸ்தானில் இம்ரான்கான் முன்னாள் மனைவி புதிய கட்சி தொடங்கினார்

Published On 2025-07-16 13:58 IST   |   Update On 2025-07-16 13:58:00 IST
  • பாகிஸ்தான் குடியரசுக் கட்சி, சாதாரண குடிமகனுக்கான குரலாகவும் செயல்படும்.
  • பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதி இல்லை.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கோரி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், பாகிஸ்தான் குடியரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- நான் இதற்கு முன்பு ஒருபோதும் அரசியல் பதவிகளை ஏற்றுக்கொண்டதில்லை. ஒரு நபருக்காக ஒரு முறை ஒரு கட்சியில் சேர்ந்தேன். ஆனால் இன்று நான் எனது சொந்த கருத்துக்களில் நிற்கிறேன்.

பாகிஸ்தான் குடியரசுக் கட்சி, சாதாரண குடிமகனுக்கான குரலாகவும் செயல்படும். இது வெறும் கட்சி அல்ல, பாகிஸ்தானின் அரசியலை உண்மையான பொது சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் சக்தி வாய்ந்த இயக்கம் ஆகும். அனைத்து பெரிய அரசியல்வாதிகளை மாற்ற நான் வந்துள்ளேன். 2012 முதல் தற்போது வரை, நான் கண்ட பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதி இல்லை. அது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News