உலகம்

தீ

கொலம்பியா சிறை கலவரம் - தீயில் சிக்கி 49 கைதிகள் பலி

Update: 2022-06-28 16:10 GMT
  • லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறைகளில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • கொலம்பியாவில் மட்டும் 97,000 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போகோடா:

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொடிய சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கின்றன. கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில், 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடந்த ஆறு சிறைக் கலவரங்களில் கலவரங்களில் இதுவரை கிட்டத்தட்ட 400 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொலம்பியாவில் தென்மேற்கு பகுதியான துலுவா நகரத்தின் சிறையில் நடந்த கலவரத்தில் இதுவரை 49 பேர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விசாரணையில், சிறையிலிருந்து தப்பிக்க அதிகாலையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சிறைக்குள் தீ வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட மோதலால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கலவரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என துலுவா சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News