உலகம்

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிட்டாடல் நிறுவனம்

Published On 2023-11-01 17:22 IST   |   Update On 2023-11-01 17:22:00 IST
  • அமெரிக்காவின் சிட்டாடல் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை டூர் அழைத்துச் சென்றது.
  • 1,200 ஊழியர்களை அவர்களது குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் சென்றார்.

டோக்கியோ:

ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் கென்னத் சி.கிரிபின். சிட்டாடல் என்ற நிதி நிறுவனம், கணினி தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை செய்யும் இவர், தனது நிறுவன ஊழியர்களை நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவையொட்டி மகிழ்விக்க விரும்பினார்.

அதற்காக சுமார் 1,200 ஊழியர்களை, அவர்களது குடும்பத்தினருடன் 3 நாள் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார்.

டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்வது, தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளுக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

டிஸ்னிலேண்ட் கட்டணம் மட்டும் குறைந்தபட்சம் 88 ஆயிரம் டாலர் இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.72 லட்சமாகும்.

மொத்த செலவுத்தொகையை அவர் வெளியிடவில்லை. இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவன பணியாளர்கள் சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News