உலகம்

12 அடி நீள ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுக்கும் வாலிபர்

Published On 2023-05-18 10:27 IST   |   Update On 2023-05-18 12:23:00 IST
  • அமெரிக்காவை சேர்ந்த நிக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • ராஜ நாகத்தை ஆற்றங்கரையில் இருந்து எடுத்து அதன் நெற்றியில் முத்தமிடுவது போன்று உள்ளது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும். ஆனால் வனத்துறையினரும், பாம்பை பிடிப்பவர்களும் லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவதை பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் ராஜ நாகம் ஒன்றை லாவகமாக பிடித்த வாலிபர் அதற்கு நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த நிக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 12 அடி ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுப்பீர்களா? என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் நிக், எந்த பதட்டமும் இல்லாமல் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை ஆற்றங்கரையில் இருந்து எடுத்து அதன் நெற்றியில் முத்தமிடுவது போன்று வீடியோ உள்ளது.

இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த ஒளிப்பதிவாளரை ராஜநாகம் தாக்க முயன்றுள்ளது. ஆனால் நிக்கின் கையில் அந்த பாம்பு அசையாமல் நிற்கிறது. பார்ப்பவர்களை பதற வைக்கும் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Tags:    

Similar News