உலகம்

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி

Published On 2023-08-07 22:36 GMT   |   Update On 2023-08-08 04:52 GMT
  • உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
  • மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷியா இடையேயான போர் ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. அவ்வப்போது, ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது இரண்டு ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதேபோல் நடந்த இரண்டாவது தாக்குதலில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் உயர்மட்ட அவசர அதிகாரி கொல்லப்பட்டார். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 19 போலீஸ் அதிகாரிகள், ஐந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News