உலகம்

40 கோடி Subscribers - யூடியூபர் Mr Beast-யை கௌரவித்த யூடியூப்

Published On 2025-07-30 10:36 IST   |   Update On 2025-07-30 10:36:00 IST
  • ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் Mr Beast சேனலை நடத்தி வருகிறார்.
  • 2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.

உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைதளமாக யூடியூப் விளங்குகிறது. நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக யூடியூப்பில் விடை கிடைக்கும்.

யூடியூபில் சேனல் தொடங்குவது எளிது என்பதால், இணைய பயனர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு சேனலை தொடங்கி அதில், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார்.

2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.

இந்நிலையில், யூடியூபில் 40 கோடி சந்தாதாரர்களை பெற்ற முதல் யூடியூபர் என்ற வரலாற்றை மிஸ்டர் பீஸ்ட் படைத்துள்ளார்.

இதனை கௌரவிக்கும் விதமாக யூடியூப் CEO நீல் மோகன் அவருக்கு பிரத்யேக Play Button வழங்கி கௌரவித்தார்.

Tags:    

Similar News