உலகம்
உக்ரைன் தலைநகர் கீவ்

போர் பதற்றம்: உக்ரைன் தலைநகரில் ஊரடங்கு அமல்

Published On 2022-02-24 22:23 GMT   |   Update On 2022-02-24 22:23 GMT
பொது போக்குவரத்து இயங்காது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீவ்:

ரஷியா படையெடுப்பால் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் கடும் போர் பதற்றம் காணப்படுகிறது. 

இதையடுத்து போர்க்கால அவசர நடவடிக்கையாக கீவ் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.

நிர்வாகம், ராணுவ நடவடிக்கை மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றை
ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் போது பொது போக்குவரத்து இயங்காது என்றும் மெட்ரோ நிலையங்களை தங்குமிடங்களாக பொதுமக்கள் 24 மணி நேரமும் பயன்படுத்தலாம் என்று கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவினால் அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News