உலகம்
விமான சேவை

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு தடை நீட்டிப்பு - ஹாங்காங் அறிவிப்பு

Published On 2022-02-11 17:08 GMT   |   Update On 2022-02-11 17:08 GMT
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளால் வைரஸ் தொற்று பரவுவதால் விமான சேவைகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஹாங்காங்:

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதற்கிடையே, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் வைரஸ் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங் அரசு, நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த தடை உத்தரவு மார்ச் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News