செய்திகள்
பிரதமர் யோஷிதே சுகா

ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

Published On 2021-09-29 12:28 IST   |   Update On 2021-09-29 12:28:00 IST
ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படுவதாக பிரதமர் யோஷிதே சுகா அறிவித்துள்ளார்.
டோக்கியோ:

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது அங்கு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டது.

எனவே ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படுவதாக பிரதமர் யோஷிதே சுகா அறிவித்துள்ளார். பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. சமூக பொருளாதார நடவடிக்கைகள் இதன் மூலம் வழக்கமான நிலையை வந்தடையும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

Similar News