செய்திகள்
நிலநடுக்கம்

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்- 2 பேர் பலி

Published On 2021-09-16 09:27 GMT   |   Update On 2021-09-16 09:27 GMT
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு லுக்சியான் கவுன்டி பகுதியை சேர்ந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.
பெய்ஜிங்:

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்திற்கு லுக்சியான் கவுன்டி பகுதியை சேர்ந்த புஜி டவுன்சிப்பில் உள்ள கிராமம் ஒன்றில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர 3 பேர் காயம் அடைந்து உள்ளனர். நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சீனா அவ்வப்போது நிலநலடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு சீனாவில் இதே சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 8 அளவாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் 87 ஆயிரம் பேர் பலியாகினர்.

Tags:    

Similar News