செய்திகள்
நிலச்சரிவு

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி - 22 பேர் மாயம்

Published On 2020-09-13 17:45 GMT   |   Update On 2020-09-13 17:45 GMT
நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 22 பேரை காணவில்லை.
காத்மாண்டு:

நேபாள நாட்டில் பருவமழை காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒருபுறம் கொரோனா பாதிப்புகளுக்காக மக்கள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், கனமழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரில் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு புறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. 

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 22 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் நாக்புஜே உள்ளிட்ட மூன்று கிராமப்பகுதிகளில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்தன. 11 வீடுகள் நிலச்சரிவில் முழுமையாக சேதமடைந்துள்ளன. காணாமல் போன 22 பேரை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. அதிகாலை கிராம மக்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நேபாள ராணுவம், ஆயுத காவல் படை மற்றும் நேபாள காவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் 7 பேரை சடலமாக மீட்டனர். மேலும் போடெகோஷி மற்றும் சுன்கோஷி ஆகிய நதிகளில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News