செய்திகள்

அமெரிக்காவில் வீட்டின் அடியில் கொடிய விஷத்தன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்புகள்

Published On 2019-03-22 11:13 IST   |   Update On 2019-03-22 11:13:00 IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு வீட்டின் அடியில் பல கொடிய விஷத்தன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. #Rattlesnakesunderhouse
அல்பேனி:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அல்பேனி பகுதியில் ஒரு வீட்டின் உரிமையாளர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென கேபிள் சேவை பாதிக்கப்படவே, தற்செயலாக வீட்டிற்கு அடியில் வந்து பார்த்துள்ளார். அடியில் சில பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியின் பாம்புகள் பிடிக்கும் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பாம்புகளை பிடிப்பவர்கள் சிலர் அந்த வீட்டிற்கு விரைந்தனர். தொடக்கத்தில் சில பாம்புகளை கண்ட அவர்கள், பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட கொடிய விஷத்தன்மை வாய்ந்த விரியன் வகை பாம்புகள் இருப்பதை கண்டு திகைத்தனர். பின்னர் சாமர்த்தியமாக அனைத்து பாம்புகளையும் பிடித்துச் சென்றனர்.



இதனை ஒருவர் தன் கையில் இருந்த செல்போன் மூலம் வீடியோ எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 18 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ, பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே 3 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

பாம்புகளைப் பிடித்தவர்கள் கூறுகையில், 'இது போன்ற பகுதிகளில் பாம்புகள் இருப்பது இயல்பானது. இவை தங்களை பராமரித்துக் கொள்ளவே வந்துள்ளன. வீட்டில் அடியில் இருந்த 45  பாம்புகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளோம்' என தெரிவித்தனர். #Rattlesnakesunderhouse


Tags:    

Similar News