செய்திகள்

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை தீவிர பிரசாரம்

Published On 2019-03-21 16:19 IST   |   Update On 2019-03-21 16:19:00 IST
தாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கு முதன்முறையாக போட்டியிடும் பினிட் கார்ம்பிரிங் என்ற திருநங்கை தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். #Thailandpolls #Thailandpm #transgenderpm
பாங்காக்:

ஜுன்டா எனப்படும் ராணுவ தலையீடு கொண்ட ஆட்சி நடைபெற்றுவரும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா பதவி வகித்து வருகிறார். அந்நாட்டின் ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையான மக்களாட்சி நடக்கும் வகையில் 500 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்தடுத்து வெளியான தேர்தல் அறிவிப்புகளும் தள்ளிக்கொண்டே போனநிலையில் தாய்லாந்து பாராளுமன்றத்துக்கு 24-3-2019 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் பியு தாய் கட்சியை சேர்ந்த சுதாரத் கி யுராபான் என்ற பெண் வேட்பாளரும், முன்னாள் பிரதமரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான அபிஷிட் வெஜா ஜிவா என்பவரும் பிரதமர் போட்டிக்கான பிரதான போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் உள்ளனர். தற்போதைய பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர்களை தவிர பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இதர வேட்பாளர்களில் தாய்லாந்து நாட்டின் பிரபல தொழிலதிபரும் அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுத்துறை பிரபலமமுமான பினிட் ந்கார்ம்பிரிங் என்னும் திருநங்கையும் முக்கிய இடத்தில் உள்ளார்.

தாய் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பினிட் ந்கார்ம்பிரிங் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அந்நாட்டின் பிரபல மாடல் அழகியாக வலம்வரும் சக்காரின் சிங்கானூட்டா என்ற திருநங்கையுடன் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இதற்காக பாலின் ந்கார்ம்பிரிங் என தனது பெயரையும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார். #Thailandpolls #Thailandpm #transgenderpm 
Tags:    

Similar News