செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயல்- 1400 விமானங்கள் ரத்து

Published On 2019-03-15 10:10 GMT   |   Update On 2019-03-15 10:10 GMT
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக 1400 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. #USSnowFall
சிகாகோ:

அமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் கடும் பனிப்புயல் வீசுகிறது. திடீரென தட்பவெப்ப நிலை மோசமானதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

கடும் பனிப்புயல் காரணமாக மேற்கண்ட 3 மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் கடும் பனி கொட்டுகிறது. டென்வர் விமான நிலையத்தில் ஓடு தளங்கள் அனைத்தும் பனியால் மூடிக்கிடக்கின்றன.

இதனால் அங்கு வந்து செல்லும் 1400 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கொலராடோ மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தேசிய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நெப்ராஸ்காவில் இன்று இரவு பனிப்புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கும் தேசிய பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பனிப்புயல் தாக்கம் உள்ள கொலராடோ, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஆபத்தான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொலராடோவில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு லட்சக்கணக்கான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வயூமிங் நகரில் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. #USSnowFall
Tags:    

Similar News